மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
ஆவடியை அடுத்து அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதிபாஸ் (40) மெடிக்கல் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரம்யா (37) இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன், 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இவர்களது மகளுக்கு பிறந்தநாள் என்பதால் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, ரம்யா அவரது தோழி வீட்டுக்குச் சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து நேற்று இரவு அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வந்துள்ளார்.
அப்போது, அண்ணனூர் ரயில்வே பணிமனைக்குச் செல்லும் வழியில் சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயில் மீது பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
அண்ணணுர் ரயில் நிலைய காவல் துறையினர், ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரயில்வே போலீசார் இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆவடி ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.