
2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய, இன்றே கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
2022- 2023 ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டு, நடப்பு நிதியாண்டில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைகிறது.
கடந்த நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கை நேற்று (ஜூலை 30) மாலை 06.00 மணி வரை ஆறு கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரேநாளில் மாலை வரை 26 லட்சத்து 76 ஆயிரம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறைத் தெரிவித்துள்ளது.
தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…
இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில், நாளை வரிக்கணக்கைத் தாக்கல் செய்பவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.