நடிகை தமன்னா தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது இந்நிலையில் தமன்னா அஜித்தின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் தனது 62 ஆவது படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார். விடாமுயற்சி என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குனர் மகள் திருமேனி இயக்கவுள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த படம் சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்க இருப்பதாக மோஷன் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்த படம் குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பரவி வருகிறது. அந்த வகையில் படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
மேலும் படத்தில் ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமன்னாவும் தற்போது ஜெயிலர் படத்தின் காவாலா பாடலின் மூலம் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வருகிறார். அஜித்தின் விடாமுயற்சியில் தமன்னா கதாநாயகியாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் மற்றும் தமன்னா கூட்டணி ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் திரைப்படத்தில் இணைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.