Homeசெய்திகள்விளையாட்டுமுதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி!

முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி!

-

 

முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி!
Photo: BCCI

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

தீரன் சின்னமலை நினைவுதினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது.

இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங், சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனால் இந்திய அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில், சூர்யகுமார் யாதவ் 21 ரன்களையும், திலக் வர்மா 39 ரன்களையும், சஞ்சு சாம்சன் 12, ஹர்திக் பாண்டியா 19 ரன்களையும் எடுத்துள்ளனர்.

தீர்ப்பில் ‘மாமன்னன்’ படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

MUST READ