சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.
‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!
இது தொடர்பாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இங்கிலாந்து அணிக்காக ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும், 156 போட்டிகளிலும் விளையாடியது பெருமை அளிக்கிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உலக அளவிலான டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளேன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022- ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல அலெக்ஸ் ஹேல்ஸ் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரைம் த்ரில்லரில் வைபவ்….. ‘ரணம்’ படத்தின் டீசர் வெளியானது!
கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், டெஸ்ட் போட்டிகளில் 573 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 2,419 ரன்களையும், டி20 போட்டிகளில் 2,074 ரன்களையும் எடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரிலும் பங்கேற்றுள்ள அவர், 6 போட்டிகளில் விளையாடி 148 ரன்களை எடுத்துள்ளார்.