Homeசெய்திகள்இந்தியாநிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!

நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!

-

 

நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!
Photo: ISRO

சந்திரயான்- 3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது

நிலவை ஆராய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி அனுப்பப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம், முதலில் புவி நீள்வட்டப் பாதையில் சுற்றி பின்னர், ஆகஸ்ட் முதல் தேதி நிலவை நோக்கிப் புறப்பட்டது. இதையடுத்து, தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையில், ஆகஸ்ட் 05- ஆம் தேதி இரவு 07.15 மணியளவில் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது.

திட்டமிட்டப்படி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் ஈர்ப்பு விசையைத் தற்போது உணர்வதாக சந்திரயான் கூறுவது போன்ற ஒரு பதிவையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது

அடுத்தப்படியாக சந்திரயான்- 3 தனது சுற்றுவட்டப் பாதையை படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, நிலவை நெருங்கும், வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி இரவில் நிலவின் பரப்பில், சந்திரயான்- 3 தரையிறங்கும்.

MUST READ