Homeசெய்திகள்தமிழ்நாடு'காவிரி விவகாரம்': மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!

‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!

-

 

"சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்"- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

காவிரியின் வரலாறு தெரியாமல், மத்திய இணையமைச்சர் கருத்து தெரிவித்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார்.

“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி என இருவரும் ஒரே அணியில் இருப்பதால், காவிரி நீர் பிரச்சனையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சருக்கு காவிரி பிரச்சனையில் முழு விவரம் தெரியவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வுக்காண முடிந்திருந்தால், நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. காவிரி உரிய நீரைத் திறந்துவிட கர்நாடகா மாநில அரசுக்கு அறிவுறுத்துமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் அலுவலகமோ, மத்திய நீர்வளத்துறை அமைச்சரோ பதில் அளிக்கவில்லை.

இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!

அதேபோல், கர்நாடக மாநிலத்தோடு, பேச்சுவார்த்தை நடத்தலாம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது, காவிரி பிரச்சனையில் அடிப்படை வரலாறே தெரியாதது தான் காரணம். அரசியல் பிரச்சனையில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறார் என்பதைத் தான் அவரது அறிக்கை காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ