Homeசெய்திகள்சினிமாஸ்கோர் செய்யும் ஜிவி பிரகாஷின் 'அடியே' பட டிரைலர்!

ஸ்கோர் செய்யும் ஜிவி பிரகாஷின் ‘அடியே’ பட டிரைலர்!

-

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அடியே படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் அடியே எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து கௌரி கிஷன், வெங்கட் பிரபு, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். மாலி அண்ட் மாண்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. விக்னேஷ் கார்த்திக் படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது.
அதைத் தொடர்ந்து தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரைலரின் மூலம் இப்படம் பாரலல் யுனிவர்ஸ் கான்செப்டில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதில் தளபதி விஜயின் யோகன் திரைப்படம்…. பிரதமர் கேப்டன் விஜயகாந்த்… கோமாளி படத்தில் நடித்திருக்கும் ஜிவி பிரகாஷ்…..என்று கலகலப்பான வேடிக்கை நிறைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அதோடு இயக்குனர் வெங்கட் பிரபு இதில் கௌதம் வாசுதேவ் மேனன் ஆக சித்தரிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ