Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லை ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்!

நெல்லை ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்!

-

- Advertisement -
kadalkanni

 

தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!
File Photo

நெல்லை ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இன்று (ஆகஸ்ட் 09) ரயில்வே சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

அதன்படி, நெல்லை- திருச்செந்தூர் பயணிகள் ரயில், திருச்செந்தூர்- வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா ரயில் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதியா சிறப்பு ரயில், இன்று விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்செந்தூர்- பாலக்காடு ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் எனவும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

“பிரதமரின் மவுன விரதத்தைக் கலைக்கவேத் தீர்மானம்”- கௌரவ் கோகாய் மக்களவையில் பேச்சு!

ரயில் மாற்றத்தைக் கொண்டு பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ