Homeசெய்திகள்சினிமாவில்லேஜ் லுக்கில் கெத்து காட்டும் மகேஷ்பாபு..... 'குண்டூர் காரம்' ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

வில்லேஜ் லுக்கில் கெத்து காட்டும் மகேஷ்பாபு….. ‘குண்டூர் காரம்’ ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

-

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தற்போது ‘குண்டூர் காரம்‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லு படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். ஹாரிக்கா & ஹைசன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் இணைந்து ஶ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இதற்கு தமன் இசை அமைக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருந்தது. பின் ஒரு சில காரணங்களால் தாமதமாக தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகேஷ் பாபுவின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் குண்டூர் காரம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் மகேஷ் பாபு லுங்கி கட்டிக்கொண்டு கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலாக சிகரெட்டை பத்த வைப்பது காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.

MUST READ