Homeசெய்திகள்இந்தியாநம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?

நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?

-

- Advertisement -
kadalkanni

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அந்த தீர்மானத்தின் மீதான விவாதங்களை காரசாரமாக நடைபெற்றன.

ஒத்திவைக்கப்பட்ட ‘கிங் ஆஃப் கோத்தா’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அந்த வகையில் மூன்றாவது நாளான இன்றும் மக்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று (ஆகஸ்ட் 10) மாலை 04.00 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசவிருக்கிறார். பல்வேறு கட்சியினர் விவாதத்தில் பங்கேற்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அனுமதி கோரியுள்ளனர்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (ஆகஸ்ட் 10) மாலை 07.00 மணியளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மொத்தமுள்ள 331 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 303 பேர் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஆவர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 144 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்டக் கட்சிகளுக்கு 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதனால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

MUST READ