Homeசெய்திகள்தமிழ்நாடுஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவரை வெட்டிய மாணவர்கள்!

ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவரை வெட்டிய மாணவர்கள்!

-

 

ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவரை வெட்டிய மாணவர்கள்!
File Photo

நெல்லை அருகே சக பள்ளி மாணவனை சாதிய வன்மத்துடன் சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டிய சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும்!”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த அம்பிகாபதி என்ற பெண்ணின் மகன், மகள் ஆகியோர் வள்ளியூரில் உள்ள கன்கார்டியா அரசுப் பள்ளியில் பயின்றனர். பிளஸ் 2 பட்டியலினத்தைச் சேர்ந்த இந்த சிறுவனுடன், நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் சாதிய மோதலுடன் முன் விரோதத்தில் இருந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் 9- ஆம் தேதி அன்று இரவில் அம்பிகாபதி வீட்டிற்கு அரிவாளுடன் ஒரு கும்பல் புகுந்துள்ளது. அங்கு படுத்திருந்த பிளஸ் 2 மாணவனையும், இதனைத் தடுக்க முயன்ற அவரது சகோதரியையும் வெட்டி விட்டு தப்பியோடியது. பாதிக்கப்பட்ட மாணவருடன் படிக்கும் சக மாணவர்கள் நான்கு பேரும் மற்றும் இரண்டு சிறுவர்களும் தான், அந்த கும்பல் என்பது கொடூரத்தின் உச்சம்.

காயமடைந்த இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இருவரையும் மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறார்கள் அரிவாளால் வெட்டியதைப் பார்த்த முதியவர் கிருஷ்ணன், அங்கேயே மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

காயமடைந்த இருவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கம்யூனிட்ஸ் கட்சிகள், சாதி ஒழிப்பு அமைப்புகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் களத்தில் ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதையடுத்தே புகாரின் பேரில் பிளஸ் 2 மாணவர்கள் நான்கு பேர் உள்பட ஆறு பேரை கைது செய்யப்பட்டனர்.

ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி!

அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

அரிவாள் வெட்டில் காயமடைந்த பிளஸ் 2 மாணவன், படிப்பு, ஒழுக்கத்தில் முன்னுதாரணமாக விளங்கியுள்ளார். இதனை வகுப்பறையில் ஆசிரியர் சுட்டிக்காட்டி பாராட்டியதே சாதி வன்மம் பிடித்த மாணவர்களுக்கு உருத்தலாகியதாகக் கூறப்படுகிறது.

MUST READ