கடலூரில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
கடலூரில் தக்காளி விலை குறைந்தது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிலோ 120 ரூபாய்க்கு மேல் விலை உச்சத்தை எட்டியது இந்நிலையில் கடலூரில் தக்காளி விலை நேற்று கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை ஆகி கொண்டிருந்த நிலையில், தற்போது கடலூர் துறைமுகம் சாலக்கரை பகுதியில் உள்ள காய்கறி கடையில் தக்காளி வரத்து அதிகமானதால் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுவதால் அந்த கடையில் பொதுமக்கள் தக்காளியை போட்டி போட்டுக்கொண்டு வாங்க குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தற்போது தக்காளியை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து காய்கறி கடைக்காரரிடம் கேட்டபோது தக்காளி வரத்து தற்போது அதிகமானதால் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து தக்காளி வருகிறது மக்கள் ஏற்கனவே தக்காளி விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள். காய்கறி கூட வாங்க முடியாத நிலைமை உள்ளதால் தற்போது தக்காளி கிலோ ரூ. 20 இதே விலையில் விற்கப்படுகிறது. வரும் காலங்களில் மேலும் தக்காளி விலை குறைய கூடும் எனவும் வியாபாரி தெரிவித்தார்