கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். இவர் பல சிறுகதைகளை தழுவி உணர்வுபூர்வமான படங்களை கொடுத்தவர்.
தற்போது இவர் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படமும் மேகங்கள் கலைகின்றது என்ற நாவலை தலைவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாரதிராஜா கௌதம் வாசுதேவ் மேனன் அதிதி பாலன் யோகி பாபு எஸ் ஏ சந்திரசேகர் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஏஓ மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.
இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள், கிளிம்ஸ் உள்ளிட்டவை அடுத்த வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.