ஹர்காரா படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
ஹர்காரா படம் ஆனது, V1 மர்டர் கேஸ் திரைப்படத்தில் நடித்திருந்த ராம் அருண் காஸ்ட்ரோ எழுதி, இயக்கி, நடித்துள்ள படமாகும். இதில் மற்றொரு கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். மேலும் கௌதமி சவுத்ரி, பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கலர்ஃபுல் பீட்டா மூமண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ராம் சங்கர் இசையமைத்துள்ளார். பிலிப் ஆர் சுந்தர் லோகேஷ் இளங்கோவன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கான்செப்ட் டீசர் மற்றும் முதல் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் சமீபத்தில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Check out the gripping trailer of #Harkara 📮▶️https://t.co/jbxamAz3Gf
In cinemas from August 25th @sarazara081187 @paradigmpixad @DMathuranj8059 @RamArunCastro1 @kaaliactor @balachandarbe @jptheactor @Pradeep44970703 @danivcharles @kivis4323 @directordeepakk @selvaAnanth999 pic.twitter.com/qhwKFofX9x
— Think Music (@thinkmusicindia) August 14, 2023
தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரில் தற்போது உள்ள தபால்காரராக காளி வெங்கட் நடித்துள்ளார் 150 வருடங்களுக்கு முன்னர் உள்ள இந்தியாவின் முதல் தபால் மனிதனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். படத்தில் காளி வெங்கட்டிடம் முதல் தபால் மனிதனின் பாட்டு வடிவில் கதையை கூறும் விதமாக ட்ரெய்லர் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.