Homeசெய்திகள்இந்தியாசெங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!

செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!

-

- Advertisement -
kadalkanni

 

செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: DD

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (ஆகஸ்ட் 15) காலை 07.30 மணிக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!

கடந்த 2014- ஆம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 10-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பிறகு ராணுவ இசைக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்து மரியாதைச் செலுத்தினர்.

விமானப்படையின் மார்க்- 3 துருவ் என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் கொடிக்கு மலர் தூவப்பட்டது. எப்போதுமே தேசம்தான் முதன்மையானது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்றுள்ளனர். தேசிய பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, டெல்லி காவல்துறை இணைந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவில், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், முப்படைகளின் தளபதிகள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் தேநீர் விருந்து ஒத்திவைப்பு!

தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

MUST READ