ஜெயிலர் பட டிக்கெட் மூலம் அதிமுக மாநாட்டுக்கு ஆள் சேர்க்க நூதன முயற்சி
மதுரையில் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகருக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஜெயிலர் பட டிக்கெட்டுகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவசமாக வழங்கினார்.
தமிழக அரசியலில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் நாங்கள் யார் என்பதை நிருபிப்போம் என்று அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் ஜெயிலர் படத்தை பார்க்க வந்த அனைவருக்கும் கடம்பூர் ராஜூ இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கினார். அந்த திரையரங்கில் காலை காட்சி மொத்தமாக 550 டிக்கெட்டுகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்பதிவு செய்து மதுரையில் இருபதாம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைப்பு விடுக்கும் விதமாக திரையரங்குக்கு முன்பு வந்து அனைவருக்கும் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, “அதிமுக மாநாடு தொடர்பாக சில அமைப்புகள் எதிரான போஸ்டர்களை ஒட்டி வருவது சிலர் தூண்டுதலின் பெயராக நடைபெற்று வருகிறது. அதிமுக எந்த சலசலப்புக்கு அஞ்சாவது” எனக் கூறினார்