‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைமை மீது அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை’ என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
90வது பிறந்த நாள் – முரசொலி மாறன் சிலைக்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், “தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றுவதற்கு அகில இந்தியத் தலைமை விரும்புவதாக நினைக்கிறேன். தற்போதைய தமிழக தலைமை மீது அகில இந்தியத் தலைமை அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றே நினைக்கிறேன்.
தலைமையை மாற்ற வேண்டும் என நினைக்கும் மாநிலங்களில் தான் தலைமை ஆலோசனை நடத்தும். ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற ஒரு வாரம், 10 நாட்களில் மாநிலத் தலைமை மாற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாநில மாநாட்டைக் கண்டு திமுக அச்சமடைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டியும், கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பதவியேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததாலும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை மாற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைமைத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.