Homeசெய்திகள்தமிழ்நாடுசந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

-

 

சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!
File Photo

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.

வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்ததாகக் கூறும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் திருமணங்கள் உள்ளிட்ட சுப முகூர்த்தங்கள் நடைபெறும் என்பதால், ஆடுகளின் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!

திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் 2,000- க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்தனர். அவற்றைப் போட்டிப் போட்டுக் கொண்டு, வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ