அதிமுக நிர்வாகி விபத்தில் பலி- மாநாட்டு பந்தலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சோகம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் சாம்பசிவம் இவர் கடந்த 15 வருடத்திற்கும் மேலாக ஒருங்கிணைந்த அன்னவாசல் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர்.
இந்நிலையில் கந்தர்வகோட்டை முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுமுகம் காரில் மதுரை மாநாட்டு பந்தலுக்கு சென்று விட்டு மீண்டும் காரில் ஊர் திரும்பியுள்ளார். புதுக்கோட்டை-திருச்சி சாலை முத்தடையான்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இவரது காரில் ஏறுவதற்கு நடந்து சாலையை கடக்க முற்பட்டபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதிமுக மாநாடு நடைபெறும் இவ்வேளையில் ஒன்றிய செயலாளர் சாலை விபத்தில் உயிரிழந்த நிகழ்வு அதிமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கூடல் நகரில் அ.தி.மு.க. மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.