Homeசெய்திகள்சினிமாவிக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்'...... ட்ரெய்லர் குறித்த அப்டேட்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’…… ட்ரெய்லர் குறித்த அப்டேட்!

-

விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால் இப்படம் ஒரு சில காரணங்களால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்ட தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஒன்றாக என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதில் விக்ரம் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். விக்ரமுடன் இணைந்து இந்த படத்தில் சிம்ரன், ராதிகா சரத்குமார், ரித்து வர்மா, திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டிரைலரை இன்னும் சில நாட்களில் வெளியிட படக்குழுவின் திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ