Homeசெய்திகள்சினிமாஹரிஷ் உத்தமன் கதாநாயகனாக நடிக்கும் 'நூடுல்ஸ்'........ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஹரிஷ் உத்தமன் கதாநாயகனாக நடிக்கும் ‘நூடுல்ஸ்’…….. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் ஹரிஷ் உத்தமன் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர். தற்போது இவர் முதன் முறையாக கதாநாயகனாக நூடுல்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை துணிவு, கர்ணன், அயோத்தி, மாமன்னன், மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மதன் இயக்கியுள்ளார்.

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த நூடுல்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இதில் ஹரிஷ் உத்தமனுடன் இணைந்து ஷீலா ராஜ்குமார், மதன் தக்ஷிணாமூர்த்தி,ஆலியா, வசந்த், நகுணா, ஹரிதா, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராபர்ட் சற்குணம் இந்த படத்திற்கு இசையமைக்க வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது விரைவில் இப்படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ