சந்திரயான்- 3 விண்கலத்தின் இறுதி வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நள்ளிரவு 01.50 மணிக்கு இரண்டாவது மற்றும் இறுதி வேகக் குறைப்பு நடவடிக்கையானது வெற்றிகரமாக நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டுள்ள பிரபல தெலுங்கு நடிகை!
நிலவின் மேற்பரப்புக்கு நெருக்கமாக தற்போது குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 34 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருவதாக இஸ்ரோ கூறியுள்ளது.
இதன் பிறகு லேண்டர் தரையிறங்கும் தளத்தின் செயல்பாடு இன்று (ஆகஸ்ட் 20) மாலை 05.45 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. நிலவின் புவி வட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரைப் பிரிக்கும் முக்கியமான பணி கடந்த ஆகஸ்ட் 17- ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.
தளபதி விஜய்… தல அஜித்… சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான்… கலகலப்பாக பதிலளித்த சத்யராஜ்!
நிலவின் தென் துருவத்தை ஆய்வுச் செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை LVM- GSLV MARK3 ராக்கெட் மூலம் ஜூலை 14- ஆம் தேதி அன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.