Homeசெய்திகள்சினிமாஅசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் கல்யாணம்.... வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் கல்யாணம்…. வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

-

- Advertisement -

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரின் திருமணம் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சமீபத்தில் நடித்திருந்த போர் தொழில் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

மேலும் அசோக் செல்வனும், பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனும் காதலித்து வருவதாகவும் அவர்களின் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. அதாவது பா ரஞ்சித் தயாரிக்கும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இவர்கள் இருவரும் நடித்து வருகிறார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.சில நாட்களுக்கு முன்பாக வெளியான தகவலின் படி இருவரின் திருமணம் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது இவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் திருமணம் திருநெல்வேலியில் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ