Homeசெய்திகள்தமிழ்நாடுகடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்!

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்!

-

 

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்!
Photo: TN Govt

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில், 4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.

டி20 தொடரை வென்றது இந்திய அணி!

இந்த நிகழ்ச்சியில், தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கா.கார்த்திகேயன் இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் இ.ஆ.ப., சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் துணை தூதர் தாகா மசாயுகி, இந்தியாவிற்கான ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமை அலுவலர் சைட்டோ மிட்சுனோரி, வி.எ.டெக் வபாக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

MUST READ