தமிழக அரசின் உயர்கவுன்சில் வகுத்துள்ள பாடத்திட்டத்தைப் பின்பற்றத் தேவையில்லை என்று பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறை!
அந்த கடிதத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்களும், தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களும் தமிழக உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொதுப் பாடத்திட்டம் குறித்து தம்மிடம் கவலைத் தெரிவித்துள்ளனர். புதிதாகப் பரிந்துரைக்கப்பட்ட பொதுப் பாடத்திட்டம், தற்போது பின்பற்றப்படும் பாடத்தை விட பின் தங்கியதாகவும் தரமற்று இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த புதிய பாடத்திட்டம் தேசிய அளவிலான தர நிர்ணயத்தில் இருந்து வெளியேற்றிவிடும் என கருதுகின்றனர். உயர் கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்வது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் உள்ளது. பல்கலைக்கழகம் அல்லது தன்னாட்சி கல்லூரி தான் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என யூசிஜி கூறியுள்ளது.
மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்!
எனவே, தமிழக உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொதுப்பாடத் திட்டத்தை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தனது கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.