Homeசெய்திகள்சினிமாஆக்ஷனில் மிரட்டும் விமல்..... 'துடிக்கும் கரங்கள்' படத்தின் டிரைலர் வெளியீடு!

ஆக்ஷனில் மிரட்டும் விமல்….. ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

-

துடிக்கும் கரங்கள் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துடிக்கும் கரங்கள். இதில் விமலுடன் இணைந்து மிஷா நரங், சௌந்தர்ராஜ், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வேலுதாஸ் இதனை எழுதி இயக்கியுள்ளார்.
ஒடியன் டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ராகவ் பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 1 முதல் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரில் விமலின் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் விமல் நடித்த குலசாமி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இந்த துடிக்கும் கரங்கள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ