Homeசெய்திகள்இந்தியாஇஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்ட அடுத்த சூப்பர் அறிவிப்பு…

இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்ட அடுத்த சூப்பர் அறிவிப்பு…

-

- Advertisement -

இஸ்ரோ தலைவர் சோம்நாத்  அடுத்த சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று சந்திரன்,அடுத்து சூரியன் என அடுத்தடுத்து சூப்பர் செய்தியினை வெளியிட்டுள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் அவர்கள்.

நிலவினைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ தயாராகி வருவதாக,அதன் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 3 நிலவில் வெற்றிகரமாக தடம் பதித்த பிறகு  இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர்,  சந்திராயனின் வெற்றி எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு பொற்காலமாகவே இருக்கும் என தெரிவித்தார்.சந்திராயனின்3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவினை தொட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா விண்கலம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.இதேப் போல் மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டமும் செப்டம்பர் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் செயல்படுத்தப் போவதாகவும் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

வானிலையை கணிப்பதற்கான ஜி.எஸ்.எல்.வி,பி.எஸ்.எல்.வி,மற்றும் எஸ்.எஸ்.எல்.வி.டி -3 என அடுத்தடுத்த மூன்று மாதங்களுக்கான பணிகளையும் இஸ்ரோவின் தலைவர் அறிவித்துள்ளார்.

MUST READ