Homeசெய்திகள்சினிமாவிக்ரமிற்கு வில்லனாகும் ஜெயிலர் பட நடிகர்.......'துருவ நட்சத்திரம்' அப்டேட்!

விக்ரமிற்கு வில்லனாகும் ஜெயிலர் பட நடிகர்…….’துருவ நட்சத்திரம்’ அப்டேட்!

-

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம். ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பின் ஒரு சில காரணங்களால் நீண்ட நாட்களாக இப்படம் நிலுவையில் உள்ளது. மேலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அதன்படி சமீபத்தில் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து ட்ரைலர் குறித்த அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிகர் விநாயகன் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. விநாயகன் மலையாளத் திரை உலகில் பல படங்களில் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் திரைப்படத்தில் விநாயகனின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டிய இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
ஆனால் அதற்கு முன்னதாகவே துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விநாயகன் மெயின் வில்லனாக நடித்துள்ளார். எனவே துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவரின் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விநாயகன், ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு பக்கா லோக்கல் வில்லனாக நடித்திருந்தார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் ஸ்டைலிஷ் ஆன வில்லனாக நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனினும் கௌதம் வாசுதேவ் மேனன் விநாயகனை எந்த அளவில் பயன்படுத்தி உள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் விரைவில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ