Homeசெய்திகள்சினிமாசிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற கடைசி விவசாயி!

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற கடைசி விவசாயி!

-

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் 69 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் அடிப்படையில் சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை கடைசி விவசாயி திரைப்படம் வென்றுள்ளது. இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் நல்லாண்டி எனும் முதியவர் அறிமுகமாகி இருந்தார். கொரோனா காலகட்டத்திற்கு முன்பாகவே இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தாலும் நான்காண்டுகளுக்குப் பிறகு தான் இந்த படம் வெளியானது. அதற்குள் நல்லாண்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் நடிப்பில் முன்பின் அனுபவம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே ஒன்றி இருந்தார்.

ஆனாலும் கடைசி விவசாயி படத்தின் அவரின் கதாபாத்திரம் தற்போது வரை மறையாமல் பேசப்படுகிறது. நல்லாண்டியையும் அவரின் கடின உழைப்பையும் கௌரவிக்கும் விதமாக நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவித்துள்ளனர்.

MUST READ