Homeசெய்திகள்இந்தியாவிக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோ வெளியீடு!

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோ வெளியீடு!

-

 

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோ வெளியீடு!
Photo: ISRO

சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த அறிவியல் உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்வை வெற்றிகரமாக முடித்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.

பல தேசிய விருதுகளை அள்ளிய ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்li திரைப்படம்!

திட்டமிடப்பட்ட நேரத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் பத்திரமாகத் தரையிறங்கிய நிகழ்வை இந்திய மக்களும், உலக நாடுகளும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய அந்த அற்புதமான மணி துளிகளை வீடியோவாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!

நிச்சயமாக இது ஒரு மாயம், அற்புதம் எனவும் நிலா மிக அழகு என்றும் சமூக வலைதளங்களில் இதனை கண்டவர்கள் மெய்சிலிர்த்துப் பதிவிட்டு வருகின்றனர். விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் நல்ல நிலையில் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ உற்சாகமூட்டும் தகவலையும் வெளியிட்டுள்ளது.

MUST READ