spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிளையாட்டு போட்டியின்போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவி- முதல்வர் நிதியுதவி

விளையாட்டு போட்டியின்போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவி- முதல்வர் நிதியுதவி

-

- Advertisement -
kadalkanni

விளையாட்டு போட்டியின்போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவி- முதல்வர் நிதியுதவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
File Photo

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டம்‌, தரங்கம்பாடி வட்டம்‌, தனியார்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ 12-ஆம்‌ வகுப்பு பயின்று வந்த மாணவன்‌ ரிஷிபாலன்‌ நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில்‌ மண்டல அளவில்‌ நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 400 மீட்டர்‌ ஓட்டப்பந்தய போட்டியில்‌ கலந்துகொண்டு காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதான ஓடுதளத்தில்‌ ஓடிக்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்‌ என்ற வேதனையான செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்‌.

இந்த துயரமான நேரத்தில்‌ மாணவர்‌ ரிவிபாலனின்‌ பெற்றோருக்கும்‌ அவரது உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம்‌ ரூபாய்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ