‘பிரக்யான் ரோவர்’ நிலவில் 8 மீட்டர் பயணித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்பு
இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘பிரக்யான் ரோவர்’ சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகப் பயணித்துள்ளது. லேண்டர், உந்து விசைக்கலன், ரோவர் ஆகியவை திட்டமிட்டப்படி சிறப்பாகச் செயல்படுகிறது. ரோவரில் உள்ள இரண்டு ஆய்வு கருவிகளான LIBS மற்றும் APXS ஆகிய கருவிகள் செயல்படத் தொடங்கின. அனைத்து அறிவியல் ஆய்வுக் கருவிகளும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
நிலவில் களமிறங்கிய ‘பிரக்யான் ரோவர்’ ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், நிலவில் என்னென்ன கனிமங்கள் உள்ளது? உள்ளிட்ட தகவல்களை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு விரைவில் அனுப்பும் என ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.