விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் மற்றும் மதுரவீரன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இதனை வால்டர் பட இயக்குனர் U அன்பு எழுதி, இயக்குகிறார். இதில் சண்முக பாண்டியனுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், கஸ்தூரிராஜா, யாமினி சந்தர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காட்டு யானைகளை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று விஜயகாந்தின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘படை தலைவன்‘ என்று இந்த படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.