கிரீஸ் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கார் மூலம் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார். இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் மற்றும் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் மற்றும் மற்ற விஞ்ஞானிகள் ஆகியோரைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷின் ‘அடியே’….திரை விமர்சனம்!
அப்போது, சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் உள்ளிட்டக் கருவிகளின் மாதிரிகளை பிரதமருக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கினார்.
அதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். நிலவின் தரையிறங்கிய சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என அழைக்கப்படவுள்ளது. இந்தியாவின் பெருமையான அசோக சக்கரம், தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டின் கவுரவத்தை, பெருமையை உலகிற்கே நாம் நிரூபித்துள்ளோம். தென்னாபிரிக்கா, கிரீஸ் சென்றிருந்தாலும் என் மனது முழுவதும் இங்கு தான் இருந்தது. நிலவில் லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23- ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும்” என அறிவித்துள்ளார்.
“லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினம்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!
இந்த நிகழ்வின் போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.