Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்!

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்!

-

 

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர் கருணாகர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே பதவியேற்றுக் கொண்டார். எனினும், அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிசீலனைத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு அறங்காவலர் குழு உறுப்பினர்களாக புதிதாக 24 பேரை நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னையைச் சேர்ந்த சங்கர், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் வைத்தியநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதில் கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் பாலசுப்பிரமணியம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

MUST READ