Homeசெய்திகள்இந்தியாசில மாதங்களில் தேர்தல்- மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!

சில மாதங்களில் தேர்தல்- மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!

-

- Advertisement -

 

சில மாதங்களில் தேர்தல்- மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!
File Photo

சில மாதங்களில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

காந்தியை கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்திற்கு விருது தருவார்கள்?….. கேள்வி எழுப்பிய பிரகாஷ்ராஜ்!

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசில் புதிதாக மூன்று பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். தலைநகர் போபாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அம்மாநில ஆளுநர் மங்குபாய் பட்டேல், ராஜேந்திர சுக்லா, கவுரிசங்கர் பைசன், ராகுல் லோதி ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜேந்திர சுக்லா முன்னாள் அமைச்சர் என்பதும், கவுரிசங்கர் ஏழாவது முறையாக மாநில சட்டப்பேரவைக்கு தேர்வுச் செய்யப்பட்டவர் என்பதும், ராகுல் லோதி முதன்முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வுச் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சாதி, மண்டல வாரியான பிரதிநிதித்துவ அடிப்படையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

MUST READ