சந்திரனில் கால் வைக்கும் இந்தியா, சாக்கடையில் கால் வைக்கும் ஆவடி மாநகராட்சி
ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செல்லும் பிரதான சாலையில் மழை நீர் வடிகால்கள் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி சாக்கடை மணல் கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, சாக்கடையில் உள்ள மணல் கழிவுகளை சுத்தம் செய்ய ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தில் சங்கர் என்பவர் புகார் அளித்துள்ளார். வருகிற மழைக்காலங்களில் நீர் போகாமல் தேங்கி நின்று விடக்கூடாது என்ற காரணத்தினால், புகார் அளித்தும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நோக்கத்திலும், தானாக முன்வந்து பணியாட்கள் கொண்டு சாக்கடை மணல் கழிவுகளை சுத்தம் செய்து உள்ளார்.
செய்தியாளர் அவ்வழியாக செல்லும் பொழுது ஆட்கள் கழிவுநீர் கால்வாயில் இறங்கி பணி செய்வதை கண்டு தனது அலைபேசியில் காணொளி மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏன் ஆட்களை கொண்டு இப்பணி செய்கிறீர்கள் என்று செய்தியாளர் கேட்டதற்கு அவர் கூறியதாவது: என் பெயர் சங்கர், சமுக ஆர்வலர் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தானாக முன்வந்து சமுகத்தின் மீது அக்கரை கொண்டு செய்ததாக கூறினார்.
மேலும் நகராட்சி நிர்வாகம் இது போன்ற செயல்களுக்கு எந்த இயந்திரங்களும் சரியான முறையில் வைத்திருக்கவில்லை. அத்துடன் அதிகாரிகள் பொது மக்களின் அடிப்படை புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண்பது இல்லை எனவும், மேலும் அதிகாரிகள் மெத்தன போக்காக பணியாற்றுகிறார்கள் என ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை குற்றம் சாற்றினார்.