கிரெடிட் கார்டின் இஎம்ஐ சரியாக கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
நிலுவைத் தேதிக்கு முன்பாகவே கிரெடிட் கார்ட் கட்டணங்களை செலுத்துவதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் ஒட்டுமொத்த நிதிநிலை ஆரோக்கியத்திலும் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் கிரெடிட் ஸ்கோரை தீர்மாணிக்கும் முக்கிய காரணி எது தெரியுமா? சரியான தேதியில் பணம் செலுத்துவது. தொடர்ந்து நீங்கள் நிலுவைத் தேதிக்கு முன்பாக கிரெடிட் கார்டு கட்டணங்களை செலுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி ஒவ்வொன்றாக தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் .
உங்களின் கிரெடி கார்டில் உள்ள பேலன்ஸ் தொகைக்கும் உங்களின் கிரெடிட் வரம்புக்குமான விகிதமே கிரெடிட் பயன்பாடு என அழைக்கப்படுகிறது. சீக்கிரமாக கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தும் போது, உங்களின் நிலுவைத் தொகையும் குறைகிறது. இதன் காரணமாக உங்களின் கிரெடிட் பயன்பாடும் குறைகிறது. கிரெடிட் பயன்பாடு விகிதம் குறைவாக இருந்தால், அது உங்களின் கிரெடிட் ஸ்கோரில் எதிரொலிக்கும். உங்களின் நிதி தேவைக்கு மூழ்தும் கடனை நம்பியில்லை என்பதையும் உங்கள் கடனை நீங்கள் சிறந்த முறையில் நிர்வகிக்கிறீர்கள் என்பதையும் இது சுட்டிக்காட்டும்.
நிலுவைத் தேதிக்கு முன்பாகவே உங்கள் கிரெடிட் கார்ட் கட்டணங்களை கட்டுவதால், அபராதம் செலுத்துவதை நீங்கள் தவிர்க்கலாம். தாமதமாக செலுத்துவதால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை, கூடுதலாக அபராதத் தொகையும் சேர்ந்து கொண்டே வரும்.
உங்கள் கிரெடிட் கார்ட் கட்டணங்களை சீக்கிரமாக செலுத்தினால், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் தொகைக்கான வட்டி செலுத்தும் காலத்தை குறைக்க முடியும். இதனால் ஒட்டுமொத்த வட்டி விகிதம் குறைவதோடு நீண்டகால நோக்கில் உங்கள் பணத்தையும் சேமிக்க முடியும்.
நீங்கள் இதற்கு முன்பு எந்த தேதியில் கட்டணம் செலுத்துனீர்கள் என்ற விவரம், உங்கள் கிரெடிட் ஸ்கோரை தீர்மாணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சீக்கிரமாக செலுத்தினால், உங்கள் கிரெடிட் ஸ்கோரும் விரைவாக அதிகரிக்கும். வங்கிக் கடன், கிரெடிட் கார்ட் கட்டணம் என எந்தவொரு கட்டணத்தையும் நிலுவைத் தேதிக்கு முன்பாக செலுத்தப் பாருங்கள். இது உங்களின் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சரியான தேதியில் தொடர்ந்து பணம் செலுத்தி வந்தால் உங்களின் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும். இதனால் வங்கிகளுக்கு உங்கள் மீதான நன்மதிப்பு பெருகும். இதனால் உங்களுக்கு குறைவான வட்டியில், மிக எளிதாக கடன் கிடைக்கும்.
நிலுவைத் தேதிக்கு முன்பாகவே சரியாக கட்டணம் செலுத்துவதால், பணத்தைச் சரியாக செலவிடும் ஒழுங்கும் பக்குவமும் உங்களிடம் உருவாகத் தொடங்குகிறது. இது உங்களின் ஒட்டுமொத்த நிதிநிலை ஆரோக்கியத்திலும் நேர்மறையான செல்வாக்கை செலுத்துகிறது.
உங்கள் கிரெடிட் கார்ட் கட்டணங்களை நிலுவை தேதிக்கு முன்பாக செலுத்துவதால் நிறைய நன்மைகள் கிடைக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதனால் நம்முடைய கிரெடிட் ஸ்கோர் மட்டும்தான் அதிகரிக்கும் என நினைக்காதீர்கள். அதிக கடனில் மூழ்குவது தவிர்க்கப்படும், பணம் தேவைப்படும் மற்ற கடமைகளை கையாள முடியும். அதோடு கிரெடிட் கார்டு வழங்கிய வங்கிகளுக்கு உங்கள் மீது நன்மதிப்பு உண்டாகும். இப்படி தொடர்ந்து சீக்கிரமாக கட்டணம் செலுத்தி வந்தால், எதிர்காலத்தில் நிறைய நிதி வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.