Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது- தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது- தங்கம் தென்னரசு

-

தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது- தங்கம் தென்னரசு

இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.98,374 ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Imageசென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை பொருளியியல் புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. 2022 – 2023ம் ஆண்டில் தமிழகத்தின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் ரூ.20.71 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியாவில் தனிநபர் வருமானம் சராசரி ரூ.98,374 ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதைவிட அதிகமாக ரூ. 1,66,727 ஆக உயர்ந்துள்ளது.2021-22 ஆம் ஆண்டு தனி நபர் வருமானம் 1,54,557 ஆக இருந்தது. 2022-23 ஆம் ஆண்டு ரூ.1,66,727 ஆக அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான நடப்பு உற்பத்தி மதிப்பு ரூ.23,64,514 கோடி.

நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் 7.92 சதவீதத்தில் இருந்து 8.19% ஆக உயர்ந்துள்ளது. 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சீரான நடவடிக்கைகளால் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளது. தனிநபர் ஆண்டு வருமானத்திலும் தமிழகம் சிறப்பான நிலையில் உள்ளது.

Image

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 2022-23ல் 9.1 சதவீதமாக உள்ளது. நடப்பு விலையில் நாட்டின் 2-வது பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. நிலைத்த விலை பொருளாதாரத்தில் நாட்டில் 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 2011-12 ஆண்டு முதல் 2017-18 வரை மாநில பொருளாதார வளர்ச்சி மிகுந்த ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு வளர்ச்சி வேகம் பிடித்து கடந்த 2 ஆண்டுகளாக சராசரியாக 8% என்ற அளவில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது.” என்றார்.

MUST READ