சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ராணா டகுபதி இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினி ஜெயலலிதா படத்தின் மெகா பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சமீப காலமாக இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாபச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் இந்த படத்தில் நடிகர் நானி நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன்பாக நானிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சர்வானந்த் நடிக்க உள்ளார் என்றும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்தது. ஆனால், தற்போது அந்த ரோலில் நானியும் நடிக்கவில்லையாம், சர்வானந்த்தும் நடிக்கவில்லையாம்.
அதற்கு பதிலாக ராணா டகுபதி நடிக்க உள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடிகை துஷாரா விஜயன் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியானால் தான் இதற்கான விடை கிடைக்கும் என்று பலர் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.