
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை வரலட்சுமியை நேரில் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை அழைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!
கடந்த 2021- ஆம் ஆண்டு இலங்கை படகில் இருந்து 227 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அது தொடர்பாக ஆறு பேரை கைது செய்தனர்.
விசாரணையில் சர்வதேச போதைப்பொருள் மற்றும் தீவிரவாதக் கும்பலுக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். இதில் 13வது நபராக குணசேகரன் என்பவரும், 14வது நபராக ஆதிலிங்கம் என்பவரும் கைதாகினர்.
ஆதிலிங்கம் பின்புலம் குறித்து விசாரிக்கையில் அவர் நடிகை வரலட்சுமியின் உதவியாளராகப் பணியாற்றியது தெரிய வந்தது. இதனால் தேசிய புலனாய்வு முகமை நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு அழைத்திருப்பதாக தகவல் வெளியானது.
இதனிடையே, குணசேகரனும், ஆதிலிங்கமும் டெமாகிராட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற பெயரில் கட்சித் தொடங்கி, கடத்தல் மூலம் கிடைத்தப் பணத்தை பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க உதவும், ஃபைனாசியர்களுக்கு சட்டவிரோதமாக கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவின் தென்துருவப் பகுதியில் ஆக்சிஜன்- கண்டறிந்த ‘பிரக்யான் ரோவர்’!
இதனால் இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகை வரலட்சுமி, தன்னை நேரில் ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு முகமை சம்மன் எதுவும் அனுப்பவில்லை எனவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆதிலிங்கம் பணியில் இருந்து விலகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.