ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலி
ஆந்திராவில் ஒற்றை யானை தாக்கி தம்பதி பலியான நிலையில், இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்தில் 190 ராமாபுரம் தலித்வாடாவைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் செல்வி கணவன் மனைவியை ஒற்றை யானை தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இதேபோல் பஸ்வபள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, ஒரு பசுவும், கன்றும் இறந்தது. இந்த சம்பவத்தால் அருகில் உள்ள கிராம மக்கள் பீதியில் உள்ளனர். மறுபுறம், அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி தம்பதியினர் மரணம் அடைந்தது கிராமத்தினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.