நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை, அதிலிருந்து இறங்கி வெளியே சென்றுள்ள ‘பிரக்யான் ரோவர்’ படம் பிடித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா
நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயானின் ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலவில் கந்தகம், ஆக்சிஜன் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளதை பிரக்யான் ரோவரில் உள்ள லேசர் அடிப்படையிலான ஸ்பெக்ட்ரோஸ் கருவி கண்டறிந்துள்ளது. இந்த நிலையில், நிலவில் தரையிறங்கி நிற்கும் லேண்டர் விக்ரமை பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா படம் பிடித்துள்ளது.
செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்த புகைபபடத்தை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் லேண்டர் நின்றுக் கொண்டிருக்கும் நிலையில், ரோவர் முழு புகைப்படத்தை எடுத்து அசத்தியுள்ளது.