வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னையில் திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) மாலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மகளிர் உரிமை தொகை: ஆவடியில் வீடு வீடாக சென்று விவரங்கள் சரிபார்ப்பு
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி. பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.