வேலூர் மாவட்டம் காட்பாடியில்,ஒற்றை யானை மிதித்து பெண் உயிரிழப்பு.
நேற்று ஆந்திராவில் சுற்றிவந்த ஆண் ஒற்றை காட்டுயானை இன்று அதிகாலை தமிழக பகுதியான காட்பாடி அடுத்த பெரிய போடி நத்தம் பகுதியில் நுழைந்து 55 வயது வசந்தா என்ற பெண்ணை மிதித்ததில் உயிரிழப்பு. அவரது பட்டியில் இருந்த ஆடுகளையும் மிதித்து கொண்றுள்ளது.
அதிகாலையில் வெளியில் கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டு வசந்தா வெளியே வந்து பார்த்தபோது யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
தற்போது யானையை கண்காணித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வேலூர் மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.