ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அட்லீஇயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கௌரிக்கான் தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று ஜவான் படத்தின் முன்வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய ஷாருக்கான் தன்னுடைய கலகலப்பான பண்பான பேச்சின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதைக் கவர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம். அனிருத்தை என் பையன் என்று கூறியுள்ளார். “நான் அட்லி சாரிடம் பேசினேன், அவர் என்னிடம், இந்த ஒரு சின்னப் பையன் அனிருத்) இருக்கிறார், அவருடன் ஒரே ஒரு பாடலை மட்டும் தமிழ் மற்றும் இந்தியில் சேர்ந்து பண்ணலாம் என்று சொன்னார். ஆனால் நான் படத்தின் எல்லாப் பாடல்களுக்கும் அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என்று கூறிவிட்டேன். எல்லா கடின உழைப்புக்கும் நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
அனிருத்தை நான் என் சொந்த மகனைப் போல் நினைக்கிறேன். அவர் இனி என்னிடம் இருந்து வரும் அழைப்புகளை தவறவிடுவார் என்று என்னிடம் கூறுகிறார், அவர் பாலிவுட்டில் பிரபலமான உடன் எனது அழைப்புகளை எடுக்க நேரம் கூட இல்லாமல் பிசியாக இருப்பார். நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என் மகனே. அனிருத் என் பையன்.” என்று பேசியுள்ளார்.
அனிருத் என் பையன், அவர் தான் ‘ஜவான்’ படத்துக்கு எல்லா பாட்டுக்கும் ம்யூசிக் போடணும்… கலகலப்பாக பேசிய ஷாருக்கான்!
-