Homeசெய்திகள்க்ரைம்தமிழகம் முழுவதும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் - தீவிர தேடுதல் வேட்டையில் தமிழக காவல்துறை

தமிழகம் முழுவதும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் – தீவிர தேடுதல் வேட்டையில் தமிழக காவல்துறை

-

- Advertisement -
kadalkanni

தமிழகம் முழுவதும் உலா வரும் செயின் பறிப்புக் கொள்ளையர்கள் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது தமிழக காவல்துறை. 

தமிழகம் முழுவதும் ரயில் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று செயின் பறிப்பு சம்பவங்களை நடத்தி தப்பித்துச் செல்லும் வட மாநில கொள்ளையர்கள் ரயில்மூலமாக பயணித்து ஒரு இடத்திற்கு சென்று இரண்டு மூன்று மணி நேரம் மட்டுமே இருந்து செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். குறிப்பாக திருட்டு வாகனத்தை பயன்படுத்தி இந்த செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்தி விட்டு மீண்டும் ரயிலின் மூலமாக வேறு ஊர்களுக்கு சென்று விடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் - தீவிர தேடுதல் வேட்டையில் தமிழக காவல்துறை

ரயில் மூலம் பயணிக்கும் பொழுது திட்டமிட்டு ஒரு இடத்தில் இருக்காமல் திடீரென ரயிலில் இருந்து ஒரு நிலையத்தில் இறங்கி அந்த ஊர்களில் சில மணி நேரங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்துவதை வாடிக்கையாக கொண்டது விசாரணையில்  வந்துள்ளது. காலை 5 மணியிலிருந்து எட்டு மணி வரை மட்டுமே நிகழ்த்துவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் வட மாநில கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது

காவல்துறையினர் தங்களை கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காகவும் ஒவ்வொரு செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்த்தியவுடன் ஆடைகளையும் காலில் அணியும் ஷூக்கள் மற்றும் செயின்கள் போன்ற தங்கள் மொத்த அடையாளத்தையும் ஒவ்வொரு மணி நேரமும் மாற்றி செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்துவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினரை குழப்புவதற்காக மக்களோடு மக்களாக இருந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த உடன் ஒரே திசையில் செல்லாமல் வெவ்வேறு திசையில் மாறி மாறி சென்று தப்பித்து வருவதாக தெரியவந்துள்ளது

அது மட்டுமல்லாது சிசிடிவி கேமராக்களில் தங்கள்  முகம் தெரியக்கூடாது என்பதற்காகவும் தங்களை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காகவும் முகமூடி, ஜெர்க்கின், ஹெல்மெட், போன்றவை அணிந்து கொண்டு செயின் பறிப்பு சம்பவங்களை மாநிலம் முழுவதும் நிகழ்த்துவது தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களில் கோயம்புத்தூரில் ஆறு பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் முயற்சி செய்து மூன்று பெண்களிடம் செயின் பறித்து சென்றதாக தெரியவந்துள்ளது. இதே போன்று தர்மபுரியில் ஐந்து பெண்களிடம் முயற்சி செய்து இரண்டு பெண்களிடமிருந்து நகை பறித்துக் கொண்டு சென்றுள்ளதாகவும், கிருஷ்ணகிரியில் இதே போன்ற ஐந்து பெண்களிடம் முயற்சி செய்து 3 பெண்களிடமிருந்து செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் - தீவிர தேடுதல் வேட்டையில் தமிழக காவல்துறை

இந்த நான்கு வடமாநில செயின் பறிப்பு கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்

அனைத்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் துணை ஆணையர்கள் காலை மாலை ரோந்து பணிகளை அதிகரித்து தீவிர கண்காணிப்புடன் இந்த செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ