டெல்லி ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கென பிரத்யேக உணவுப் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஜி ஜின்பிங், சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்டத் தலைவர்கள் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் நிலையில், அவர்கள் தங்குவதற்கு டெல்லி மற்றும் குர்கானில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் தயாராகி வருகின்றனர்.
தலைவர்கள் தங்குவதற்கு ஐடிசி மௌரியா, ஷாங்க்ரி லா, தாஜ் பேலஸ், கேலரிக்ஸ் உள்ளிட்ட நட்சத்திர விடுதிகளில் ஏராளமான அறைகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்திய கலாச்சாரப்படி, தபலா, சித்தார், சரோத் மற்றும் ஷெஹ்னாய் இசைக்கு மத்தியில் தலைவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
தாஜ் ஓட்டலில் தங்கும் தலைவர்களுக்கு காலையில் சிறுதானிய உணவுகள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளை மச்சான் மற்றும் வொர்க் ஆகிய உணவகங்கள் வழங்கவிருக்கின்றனர். ஷாங்க்ரி லா நட்சத்திர ஓட்டலில் இத்தாலிய உணவுகள், சிறுதானிய உணவுகள், கான்டோனீஸ் உணவுகள் தலைவர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன.
நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்
ஹோட்டல் ஹயாத் ரீஜென்ஸில் ஃபாவா பீன்ஸ், ஜிபென் ஹல்லூமி, மனகேஷ் ஜாதர், ஹைனானீஸ் சிக்கன் ரைஸ், மிளகாய் நண்டு லக்சா, இறால், புதிய வகை பாஸ்தா, பட்டர் சிக்கன், மட்டன் பிரியாணி, தால் மக்னி உள்ளிட்ட உணவுகளைத் தலைவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்பெஷல் டீ, காபி, இனிப்பு வகைகள், சாக்லேட் உள்ளிட்டத் தின்பண்டங்களும் உணவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.