Homeசெய்திகள்சினிமாமுதல் திருமண நாளில் குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்!

முதல் திருமண நாளில் குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்!

-

குக் வித் கோமாளி புகழ் தனது முதல் திருமண நாளை முன்னிட்டு குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிகர் புகழ் , விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அதன் பின் சினிமாவிலும் பட வாய்ப்புகள் கிடைக்க பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித், சூர்யா, சசிகுமார், அருண் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் துடிக்கிறது மீசை, மிஸ்டர் ஜு கீப்பர் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி புகழ் தன் காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் புகழ் – பென்சியா தம்பதியினர் தங்களின் முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் தந்தையாக போகிற செய்தியையும் பகிர்ந்துள்ளார். ” என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள் ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப் போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. என்னை தகப்பனாகிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள். இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ